ஜெனீவாவில் பெரும் சவாலை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் – திஸ்ஸ

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது. எனவே அரசாங்கம் இந்த அறிக்கையை ஆழமாக ஆராய்ந்து, உரியவாறான பிரதிபலிப்பை எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை நோக்குகையில் எதிர்வரவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்றே தோன்றுகின்றது. எனவே சர்வதேசத்தின் மத்தியில் ஏனைய நாடுகளின் உதவியின்றி எம்மால் தனித்துப் பயணிக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.