ஜெனிவாவில்  நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சுயாதீனத்தை  விட்டுக் கொடுக்க மாட்டோம்  – மகிந்த

ஜெனிவாவில் எவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்டாலும் நாட்டின் சுயாதீனத்தன்மையை விட்டுக்கொடுக்கமாட்டோம்  என பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போரை வெற்றிகொண்ட இராணுவத்தினரை நல்லாட்சி அரசாங்கம்  ஜெனிவாவில் குற்றவாளியாக்கியது. பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை நன்கு அறிந்து நாட்டுக்கு எதிரான பிரேரணையில் இருந்து விலகினோம்.

பௌத்த சாசனத்தை முன்னிலைப்படுத்தி அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுகின்றது.  2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் ராஜபக்சே பெயருடன் தொடர்புடையவர்களையும் எமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளையும் நல்லாட்சி அரசாங்கம் அரசியல் பழிவாங்களுக்குட்படுத்தியது. பௌத்த மத தலைவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பௌத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டிய எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் காணப்பட்டது. இவ்வாறான நிலையில், 1019ம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து பௌத்த சாசனத்தைப் பாதுகாக்க புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது” என்றார்.