ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையில் 1960-ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த மறுநாள் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

1960-ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் திகதி  பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இந்த சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, எந்தவொரு நாடும் தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கார்கில் உள்பட மூன்று போர்கள் நடைபெற்றன. ஆனால் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும், இந்த ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.