ஜனாதிபதியின் அரசியலை சித்தரிக்கும் கேலிச் சித்திரங்கள் – PRESS VS PREZ வெளியீடு

கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வகிபாகத்தை நாட்டின் கேலிச்சித்திரக் கலைஞர்கள் சித்திரித்த விதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன ‘PRESS VS PREZ’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று கொழும்பு தாமரை தடாக கலையரங்கத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டது.

இவ்வாறான தொகுப்புகள் ஜனநாயகத்தின் ஓர் அங்கமாகும் எனவும், அதனால் நாட்டில் சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுள்ளமையை உறுதி செய்ய முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சர்வாதிகார ஆட்சியில் இவ்வாறான படைப்புகள் ஒருபோதும் பிறக்காது என்றும், குற்றவியல் அவதூறு சட்டத்தை நீக்கியமை குறித்து பெருமையடைகிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

4 8 3 ஜனாதிபதியின் அரசியலை சித்தரிக்கும் கேலிச் சித்திரங்கள் - PRESS VS PREZ வெளியீடு 4 8 4 ஜனாதிபதியின் அரசியலை சித்தரிக்கும் கேலிச் சித்திரங்கள் - PRESS VS PREZ வெளியீடு 4 8 5 ஜனாதிபதியின் அரசியலை சித்தரிக்கும் கேலிச் சித்திரங்கள் - PRESS VS PREZ வெளியீடு 4 8 6 ஜனாதிபதியின் அரசியலை சித்தரிக்கும் கேலிச் சித்திரங்கள் - PRESS VS PREZ வெளியீடு 4 8 7 ஜனாதிபதியின் அரசியலை சித்தரிக்கும் கேலிச் சித்திரங்கள் - PRESS VS PREZ வெளியீடு 3 8 8 ஜனாதிபதியின் அரசியலை சித்தரிக்கும் கேலிச் சித்திரங்கள் - PRESS VS PREZ வெளியீடுகடந்த காலங்களில் அரசாங்கம் சிரமப்பட்டு முன்னெடுத்த வேலைத்திட்டங்களினால் நாட்டின் பொருளாதாரத்தைச் சாதகமான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளதாகவும், ஒரு நாடாக நாம் இக்கட்டான காலத்தின் கடைசி பகுதியில் இருக்கிறோம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இக்கட்டான காலத்தில் மனதிற்கு மகிழ்ச்சி அளித்த, இந்தக் கேலிச்சித்திர படைப்புகள் அனைத்தையும் உருவாக்கிய படைபாளிகள் அனைருக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 9 ஆவது நாடானளுமன்ற உறுப்பினராக 2021 ஜூன் 23 ஆம் திகதி பதவியேற்றதிலிருந்து, மே 2023 வரையிலான அவரது பயணம் குறித்து, நாளிதழ்களில் வெளியான 618 கேலிச்சித்திரங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த நூலின் முதல் பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன ஜனாதிபதிக்கு வழங்கிவைத்தார். அத்துடன், 40 கேலிச்சித்திர கலைஞர்கள் மற்றும் 20 ஊடகவியலாளர்கள் இந்த படைப்புக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். அவற்றை தொலைக்காட்சியின் ஊடாக வெளியிட்ட கலைஞர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்தார்.

இந்நூல் வெளியீட்டு விழாவில் இந்திய புகழ்பெற்ற கேலிச்சித்திர கலைஞர் நள பொன்னப்பா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பேராசிரியர் ரொஹான் நெட்டசிங்கவால் நூல் பற்றிய விமர்சன விரிவுரையை நிகழ்த்தப்பட்டது.