ஜனாதிபதித் தேர்தல்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.ம. சுதந்திரக் கூட்டமைப்பு சஜித்துக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தீர்மானித்துள்ளன.

இதனை, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை (03) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.