யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் அடங்கிய குழு ஒன்று அங்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த மாதம் 22ஆம் திகதி பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவர் எனத் தெரியவருகின்றது.
யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி விஜயம் செய்ய உள்ள குறித்த குழுவினர், 22ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் யாழ்ப்பாணத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



