சூடானில் துரித ஆதரவுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 2,500க்கும் மேற்பட்டோர் மரணம்

சர்வதேச ஊடகங்களின்படி, சூடானில் அப்பாவி பொதுமக்கள் மீது துரித ஆதரவுப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 2,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

படுகொலைக்கு தலைமை தாங்கியதாகக் கூறப்படும் RSF தளபதி அபு லூலூ மீது பயங்கரவாதக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அபுலுலு கைது செய்யப்பட்டதாக RSF வெளியிட்ட அறிக்கை பரவலாகப் பேசப்பட்டாலும், அது வெறும் தவறான படம் என்று பல மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

RSF குழுவிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இஸ்ரேலின் பின்கதவு ஆதரவு இருப்பதாகக் கூட பல ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளும் காணப்படுகின்றன.

இச் சம்பவத்துடன் கடந்த வாரத்தில் மமாத்திரம் துப்பாக்கிச் சூட்டில் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூடானின் மதிப்புமிக்க இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக பல நாடுகள் தங்கள் அரசியல் மற்றும் இராணுவ செல்வாக்கை வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், உலக நாடுகளின் அரசியல் கொந்தளிப்பு காரணமாக, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் அநியாய மரணங்கள் ஒரு பெரிய மனிதாபிமான சவாலாக மாறியுள்ளன.