சுரேஷ் சாலே கைதும் ஈஸ்டர் மர்மங்களின் திறவுகோலாகுமா?  : விதுரன்

இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையில் ‘அசைக்க முடியாத மூளை’ என்று வர்ணிக் கப்பட்ட மேஜர்ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த பெப்ரவரி 25 அன்று கைது செய்யப்பட்ட விதம், நாட்டின்அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இது வெறுமனேயொரு தனிநபரின் கைது அல்ல. மாறாக, இலங்கையின் அண்மைய கால அரசியல் மாற்றங் களுக்குப்பின்னால் இருந்ததாகக் கூறப்படும் பாரியதொரு ‘நிழல் இராணுவச் சூழ்ச்சி’யின் திரையை விலக்குவதற்கான முதல் முயற்சியென்று கருதலாம்.
குறித்த தினமன்று கொழும்பு பேலியகொடவில் வைத்து காலை 7.50 மணியளவில் சுரேஷ் சலே மடக்கிப் பிடிக்கப்பட்ட விதம், நீண்ட நாட்கள் கண்காணிக்கப்பட்டு மிகவும் திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
அவர் கைது செய்யப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே அவரது இல்லம் சோதனைக்குள்ளாக் கப்பட்டது, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் காட்டுவதோடு, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 72 மணிநேரத் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டிருப்பது, சாதாரண விசாரணைக்கும் மேலான தீவிரத்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
தற்போது அநுரகுமார திசாநாயக்க தலைமையி லான அரசாங்கம், தரமற்ற நிலக்கரி இறக்குமதி மோசடி மற்றும் எரிவாயுநெருக்கடி போன்ற பொருளாதாரச் சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வரும் சூழலில், இந்த கைது நடவடிக்கை அரசாங்கத்தின்மீதுள்ள அரசியல் அழுத் தத்தைக் குறைப்பதற்கான கருவியாகவும் பார்க்கப்படலாம்.
இருப்பினும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குத லின் பிரதான சூத்திரதாரிகளைக் கண்டறிவோம் என்ற ஜனாதிபதியின் தேர்தல்வாக்குறுதிக்கு இதுவொரு முக்கிய நகர்வாகும். ஆனாலும் இந்த நேரத்தில் திடீரென்று சலேயை கைது செய்வதற்கானபின்னணி புரியாத புதிராகவே உள்ளது.
இருப்பினும், அநுரகுமார அரசு ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்தே இந்த கைது இடம்பெற்றிருப்பதுகவனிக்கத்தக்கது. அண்மையில் ஜனாதி பதி அநுரகுமார கூறியது போல, ‘சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் திட்டமிட்டுஅழிக்கப்பட்டிருப்பதால்’ புலனாய்வா ளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தனர்.
எனவே, இந்தத் தாமதமானது, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே போன்ற ஒரு ‘புலனாய்வுத்துறையின் மூளையை’ மடக்குவதற்குத்தேவையான வலுவான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட கால அவகாசமாக இருக்கலாம்.
எவ்வாறாயினும், சுரேஷ் சலே என்பவர் ஒரு சாதாரண இராணுவ அதிகாரி அல்ல. அவர் இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின்தலைவராக இருந்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மிக முக்கிய வெற்றிகளைத்தேடிக்கொடுத்தவர். குறிப்பாக, தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல்மற்றும் மலேசியாவில் வைத்து கே.பி. (குமரன் பத்மநாதன்) கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டமைபோன்றவற்றில் இவரது பங்களிப்பு முதன்மையானது.
அதேபோன்று இலங்கை இராணுவத்தில் விடுத லைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் படைகளுக்கு சாதகமாகமாறுவதற்கு காரணமாக அமைந்த ஆழ ஊடுருவும் அணிகளை கையாளுவதில் வல்லவராக சலே இருந்தார்.
அத்துடன், புலனாய்வுத் தந்திரங்களை வகுப்பதில் ஒரு நிபுணராகக் கருதப்பட்ட சலே கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில், சிவில் அதிகாரிகளைக் கொண்ட அரச புலனாய் வுச் சேவைக்கு தலைவராக நியமிக்கப்பட்ட முதல் இராணுவ அதிகாரியாகவும் இருக்கின்றார்.
குறித்த  நியமனம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் ராஜபக்ஷகள் சர்சைகளை விட வும் சலே மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். அதனால் சர்ச்சைகள் பொருட்டாக கொள்ளப்படவில்லை.
இவ்வாறான நிலையில், ஈஸ்டர் ஞாயிறு குண் டுத் தாக்குதல் என்பது வெறும் மத அடிப்படைவாதத் தாக்குதல் மட்டுமல்ல, அது ராஜபக்ஷவினரை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்கான திட்டமிட்ட ‘அரசியல் சதி’ என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் சனல் 4 ஆவணப்படம் மூலம் உலகிற்குத் தெரியவந்தது.
பிள்ளையானின் பிரத்தியேக செயலாளராக இருந்த ஆசாத் மௌலானா சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்த தன் பின்னர் அவரதுபகிரங்கமான வாக்குமூலங்களும் சாட்சியங்களும் சுரேஷ் சலேவை நோக்கியே இருந்தது.
அந்த அடிப்படையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர் பில் வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதலுக் கான திட்டம்தீட்டியமை, உதவி ஒத்தாசை புரிந்தமை ஆகிய குற்றங்களின் அடிப்படையில் சலே கைது செய் யப்பட்டிருப்பதாக பொலிஸ்ஊடகப்பேச்சாளர் எப்.யு.வுட்லர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.
ஒரு தொழில்முறை புலனாய்வாளரான சுரேஷ் சலேயிடமிருந்து உண்மைகளை வெளியே எடுப்பது என்பது நாய் வாலைநிமிர்த்த முயற்சிப்பதற்கு சமமானது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பலம் மற்றும் பலவீனங்களை அங்குலம்அங்குலமாக அறிந்த ஒருவரிடம் விசாரணை நடத்துவது சாதாரண அதிகாரிகளுக்குச் சாத்தியமற்ற காரியம்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒருமுறை கூறியதைப் போல,  சண்டை தவிர்க்க முடியாதது என்றால், முதல் அடியை எதிரியின் முகத்தில் நாமே அடிக்க வேண்டும்’ என்ற தத்துவத்தில் பயிற்றப்பட்வர் தான் சலே.
சலே தனது ‘ஆஸ்தான குருவுக்காக’ செய்த இரகசிய நடவடிக்கைகளை அவர் அத்தனை எளிதில் ஒப்புக் கொள்வார் என்பதுகற்பனைக்கு எட்டாதவொன்றாகும். சிஐடி யினரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், சட்டத்தின் ஓட்டைகளைப்பயன்படுத்தி மௌனம் காப்பதே இவரது பிரதான பாணியாக இருக்கலாம்.
சுரேஷ் சலே உண்மைகளைக் கூறினாலும், அந்த உண்மைகள் ஒரு கட்டத்திற்கு மேல் ‘இலங்கை’ எனும் நாட்டின்’இறைமையோடு’ ஆழமாகப் பின்னிப் பிணைந் திருக்கும். இந்த உண்மைகள் வெளியே வந்தால், அது இலங்கையின்ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப் பையுமே சிதைத்துவிடும்.
ராஜபக்ஷக்களை அதிகாரத்திற்குக் கொண்டு வரு வதற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவே சொந்த நாட்டு மக்கள் மீது குண்டுவீசியது என்பது நிரூபிக்கப்பட்டால், அது சர்வதேச அரங்கில் இலங்கையை ஒரு ‘பயங்கரவாதத் தேசமாக’ அடையாளப்படுத்திவிடும். படைகளுக்கான அபிமானத்தை வெகுவாக இழக்கச் செய்துவிடும் என்பது யதார்த்தமானது.
ஆகவே சலேயிடமிருந்து உண்மைகளை வெளியே எடுத்துவர எந்தவொரு பௌத்த பேரினவாத சக்தியும் விரும்பாது. சுரேஷ்சலேயைக் காப்பாற்ற சிங்கள, பௌத்த இனவாதம் மீண்டும் துடித்தெழும். ‘யுத்த வெற்றி நாயகர்களை அரசாங்கம்பழிவாங்குகிறது’ என்ற கோசம் ஏற்கனவே ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, பேராசிரியர் ரொஹான் குணரத்ன, பொதுஜனபெரமுன, தவிர்க்க முடியாது ஐக்கியமக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்று அனைத்துமே பொதுவெளியில் போர்க்கொடி தூக்கியுள்ளன.
அடுத்து சலேக்கு 90நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்படலாம். அவ்வாறில்லாது நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டால் சட்டத்தின் முன் வாதாட  தென்னிலங்கையின் பலம் வாய்ந்த தரப்புகள் வரிசைகட்டி நிற்கும். அதனடிப்படையில் சலேக்கு பிணை அளிகப்பட் டால் அது அரசாங்கத்துக்கு பெருந்தலையிடியாக மாறி விடும்.
அதேநேரம், சலே ஒருவேளை மௌனம் கலைத்து ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் அப்பாவி உயிர்களைப் பறித்த கொடூரச்செயலுக்குப் பின்னால், நாட்டின் பாதுகாப்புத் தலைவர்களே இருந்தனர் என்பது நிரூபிக்கப்பட்டால், அதுவொரு பாரதூரமானஇராணுவச் சூழ்ச்சியாகும்.
1962 மற்றும் 1966 ஆம் ஆண்டு நடந்த தோல்வி யுற்ற இராணுவப் புரட்சிகளைப் போலன்றி, இது ஒரு ‘வெற்றி பெற்ற மறைமுகஇராணுவச் சூழ்ச்சியாக’ வரலாற்றில் பதியப்படும். அதன் தாக்கங்கள் மிகமிக பாரதூரமானவையாகவே இருக்கும். ஆனால்அதற்கான சாத்தியப்பாடுகள் மிகச் சொற்பமானவை.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதி ரான போரில் வெற்றிகளை ஈட்டியவர் என்று மார்பு தட்டிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் தீவிரவாதத்திற்குத் துணை நின்றதாகக் கைது செய்யப்பட்டிருப்பது, இலங்கையின் கடந்த கால மற்றும் எதிர்காலப்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது.
இத்தனை அரசியல் சகதிக்குள்ளும், சட்டத்தின் ஓட்டைகளுக்குள்ளும் சதிராடி, சுரேஷ் சலேயை குற்றவாளி என்று நிரூபிக்கும்வரை இலங்கையின் ‘அரச இயந்திரம் நேர்மையாக செயற்படுமா’ என்பது ட்ரில்லியன் டொலர் கேள்வி தான்.
இத்தனை சிக்கல்களுக்குள்ளும் விசாரணைகள் நேர்மையாகச் செல்கின்றன. அவ்விதமான சூழலில் சலே யின் கைதைமையப்படுத்தி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ இனவாதத்தையோ காரணமாக கூற வேண்டாம் என்றுபேராயரில்லம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்புக்கான பதில்….?