சுரேன் ராகவனுக்கு தேசியப்பட்டியல்; பொதுஜன பெரமுன மீது சுதந்திரக் கட்சி கடும் அதிருப்தி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்கியமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்-

“தேசியப் பட்டியலுக்கான ஒரு ஆசனத்துக்கு நான்கு பெயர்களை சுதந்திரக் கட்சி பரிந்துரை செய்திருந்தது. ஆனால் எங்கள் பரிந்துரையைப் புறக்கணித்துவிட்டு, தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு சுரேன் ராகவனின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பொதுஜன பெரமுன அனுப்பியுள்ளது.

எனினும் இவ்விடயம் தொடர்பாக பொதுஜன பெரமுன எங்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். இது இரு கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட உடன்பாட்டுக்கு முரணானது. எனவே நாம் பொதுஜன பெரமுனவின் இத்தகைய செயற்பாடு குறித்து அதிருப்தி அடைந்துள்ளோம்” என்றார்.