சுகாதார உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை காலையுடன் நிறைவுக்கு வருகிறது.
நேற்றும் நேற்று முன்தினமும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சுகாதார உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். போக்குவரத்து உள்ளிட்ட கொடுப்பனவாக மருத்துவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதேபோன்ற கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 72 சுகாதார தொழில்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த நிலையில், நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண குறித்த தொழில்சங்கங்களுடன் பேச்சு
நடத்தினார். இதன்போது, “ஜனாதிபதி, திறைசேரியின் செயலாளர் ஆகியோருடன் எதிர்வரும் 6ஆம் திகதி பேச்சு
நடத்தி சாதகமான தீர்மானம் பெற்றுத் தரப்படும்”, என்று இதன்போது அமைச்சர் தொழில்சங்க பிரதிநிதிகளுக்கு
உறுதியளித்தார்.
இதையடுத்தே இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வருகின்றது.