சீன ஆக்கிரமிப்பால் எதிர்காலத்தில் சிங்கள சமூகம் பாதிக்கப்படும்-  சாணக்கியன் எச்சரிக்கை

இலங்கையில் இன்று ஏற்பட்டு வரும் சீன ஆக்கிரமிப்பால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழர்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட அதே அசாதாரண செயற்பாடுகளே முஸ்லீம் சமூகத்திற்கும் ஏற்பட்டது.  அதன் விளைவே ஈஸ்டர் தாக்குதல் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் மேலும் அவர் உரையாற்றுகையில்,“தமிழர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் போது சிங்களவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் சிங்கள மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை விடுக்கிறேன், எதிர்காலத்தில் நாட்டில் உருவாகும் நெருக்கடி நிலைமையில் சிங்கள மக்கள் மத்தியில் புரட்சி ஒன்று உருவாகுமானால் அப்போது என்னவாகும் என்று சிந்தியுங்கள். சீனாவின் ஆக்கிரமிப்பு, அவர்களின் வர்த்தக ஆக்கிரமிப்பு காரணமாக எதிர்காலத்தில் நிச்சயமாக நாட்டில் பாதிக்கப்பட்ட சிங்கள சமூகம் ஒன்று உருவாகும். ஆப்போது நாட்டில் கிளர்ச்சி உருவாகும். எனவே இலங்கைக்குள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக முரண்பாடுளை ஏற்படுத்தி அரசியல் செய்யும் கலாசாரத்தை கைவிட வேண்டும்” என்றார்.