சீனாவுடனான உறவுகளைப் பலப்படுத்துவதே பொதுஜன பெரமுனவின் திட்டம் – கேகலிய

சீனாவுடனான உறவுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதனை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவதே எமது புதிய அரச தலைவரின் முதன்மையான நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் கேகலியா ரம்புக்வெல நேற்று (19) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பல சந்தர்ப்பங்களில் சீனாவுடனான உறவுகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகநகர அபிவிருத்தி திட்டங்களை பிரதமர் நிறுத்தியிருந்தார். அது 18 மாதங்கள் தடைப்பட்டிருந்தது.

மேலும் லொட்டஸ் கோபுர விவகாரத்தில் சீனா நிறுவனம் 2 பில்லியன் ரூபாய்களை மோசடி செய்துள்ளதாக அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார். சீனா அதிகாரி அருகில் உள்ள போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோத்தபாயா ராஜபக்சா உரிய நேரத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெறுவார். இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு அவரே சிறந்த தலைவராவார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.