சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்

இலங்கையின் பௌத்த மதத்தின் முப்பீடங்களான சியாம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ நிகாயாக்களின் மகாநாயக்க தேரர்கள், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சிறைச்சாலை உடையில் முன்னிலையானமை தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏற்பட்டுள்ள இந்தத் தவறை உடனடியாகத் திருத்துமாறும் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடிதத்தின் பிரதி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.