சிறீலங்கா வான்படையை பலப்படுத்தும் இந்தியா

சிறீலங்காவுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி சிங்கள மக்களுக்கு தொடர்ந்து நன்மைகளை புரிந்துவரும் இந்தியா தற்போது சிறீலங்கா வான்படையை பலப்படுத்தும் முகமாக 341 ரடார் பாகங்களை வழங்கியுள்ளது.

200 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான இந்த பாகங்கள் இந்தியாவின் வான்படை அனரனோவ்-32 விமானங்கள் மூலம் கடந்த 10 ஆம் நாள் சிறீலங்காவுக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.

2011 ஆம் ஆண்டு இந்திரா எம்.கே 2 என்ற வான்பாதுகாப்பு கண்காணிப்பு ரடார் தொகுதியை இந்தியா சிறீலங்காவுக்கு வழங்கியிருந்தது. அதனை பரபமரிப்பதற்கான உதிரிப்பாகங்களையும் இந்தியா தொடர்ந்து வழங்கி வருகின்றது.

india radar சிறீலங்கா வான்படையை பலப்படுத்தும் இந்தியாஇதனை கையளிக்கும் வைபவம் நேற்று (16) கட்டுநாயக்கா வான்படைத்தளத்தில் இடம்பெற்றது அதில் சிறீலங்காவுக்கான இந்தித் தூதுவர் கோபால் பாலே மற்றும் சிறீலங்கா வான்படைத் தளபதி ஏயர் மார்சல் சுதர்சனா பத்திரனா ஆகியோர் கலந்து கொண்டனர்.