சிறீலங்கா வருகிறார் பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் மட்ட அரசியல் குழு ஒன்றுடன் அவர் சிறீலங்காவுக்கு வருவதாகவும், ஒரு சில தினங்களில் அவரின் பயணம் திட்டமிடப்பட்டபோதும் தற்போது அது சில வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சிறீலங்கா வந்து சென்றுள்ள நிலையில் தற்போது பாகிஸ்தானின் உயர்மட்டக்குழு சிறீலங்கா வருவது குறிப்பிடத்தக்கது.