சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் – பிரித்தானியா கவலை

சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியா தனது கவலையை வெளியிட்டுள்ளது.

சிறீலங்காவுக்கான பிரித்தானியா தூதுவர் சாரா ஹல்டன் இந்த தகவலை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இறந்தவர்களை பலவந்தமாக எரிக்கும் செயற்பாடுகள் உட்பட பல மனித உரிமை மீறல்கள் சிறீலங்காவில் மேற்கொள்ளப்படுகின்றன.

எதிர்வரும் வாரம் சமர்ப்பிக்கப்படும் ஐ.நா அறிக்கையிலும் இது தொடர்பான விடையங்ககள் கருத்தில் கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.