சிங்கள படையினருக்கு தேவைப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள்;தொடரும் மண்பறிப்பு

புங்குடுதீவு – வல்லன்கிராமத்தில் ‘கோட்டயம்பர’ கடற்படை முகாமுக்காக 14 ஏக்கர் மக்கள் காணி சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளன.

14 நாள்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு பிரதேச செயலாளரினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக மண்கும்பானிலுள்ள தீவகத்தின் பிரதான கடற்படை முகாம் தளபதியும் புங்குடுதீவு வல்லன் கடற்படை முகாமின் பொறுப்பாளர்களாக கடமையாற்றியவர்களும் இந்தக் காணிகள் மற்றும் அருகிலுள்ள மலையடி நாச்சிமார் கோயிலையும் உள்ளடக்கி ஆக்கிரமிப்பதற்காக கடும் முயற்சிகளை எடுத்திருந்தனர்.

எனினும் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.