சாண் ஏற முழம் சறுக்கும்  ஐ நா தீர்மானம்!-பா. அரியநேத்திரன்

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 60, வது கூட்டத் தொடர் கடந்த 2025,செப்டம்பர் 08 தொடக்கம் 2025அக்டோபர் 08 வரை நடைபெற்றதை யாவரும் அறிவர். ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான இனவழிப்புக் குற்றங்கள் ஆகியவற்றுக்கு நீதியை உறுதிசெய்யப் பன்னாட்டுப் பொறிமுறை வேண்டும், செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைக்குழிகளை ஆய்வு செய்வதற்கு பன் னாட்டுப் பொறிமுறை வேண்டும், சர்வதேச விசா ரணை வேண்டும் என்று  ஈழத்தமிழ் அமைப்புகள், புலம்பெயர் அமைப்புகள்,தமிழ்நாட்டில் இருந்தும் பல அமைப்புகள் எழுத்துமூலமான கோரிக்கைகளை முன்வைத்தன.
ஐநா அமர்வுகளிலும் நேரில் சென்று தமிழ் அமைப்பு சார்ந்தவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தினர். கடந்த 2025,அக்டோபர் ,06 ஆம் நாள் இலங்கை பொறுப்புக்கூறல் மற்றும் மீளிணக்கத்திற்கான 60/1  நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் இங்கிலாந்து, கனடா, மலாவி, மாண்டிநிக்ரோ, வட மாசிடோனியா ஆகிய ஐந்து நாடுகள் முன்மொழிந்தன. கிட்டதட்ட 30 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இசைவு தெரிவிப்பதாக கைச்சாத்திட்டதால் வாக்கெடுப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இந்த தீர்மானம் முந்தைய தீர்மானங்களான 2015,ல் 30/1 ,2021,ல் 46/1,2022,ல் 51/1, மற்றும் 2024, ல் 57/1 ஆகிய ஆண்டு தீர்மானங்களில் இருந்து தற்போதைய 2025,ல் 60/1, தீர்மானம் ஒரு படி கீழே இறங்கிவிட்டது இது “சாண் ஏற முழம் சறுக்கும் தீர்மானம்” என்றே கொள்ளவேண்டியுள்ளது.
“பன்னாட்டு” என்ற சொல் அடியோடு நீக்கப் பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீரமானம் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு பொறிமுறை ஒன்றை முன்வைத்தது. ஆனால், பத்தாண்டுகள் கழித்து அதே பேரவையில் முந்தைய நிலைப்பாட்டை மறுத்து உள்நாட்டுப் பொறிமுறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டம் தமிழர்களுக்கு எதிராகத் தான் 1979, தொடக்கம் 2025, வரை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது, காணாமலாக்கப்பட்டோரு க்கு இன்னும் நீதி உறுதி செய்யப்படவில்லை, செம்மணி புதைக்குழிகளைத் தோண்டியெடுக்கும் ஆய்வுப் பணியில் பன்னாட்டுப் பங்கேற்புதேவை. மென்மேலும் இலங்கை அரசுக்கு கால அவ காசம் கொடுப்பது என்பது கட்டமைக்கப்பட்ட  இனவழிப்பை செய்வதற்கு அங்கீகாரம் கொடுக்குமே அன்றி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தாது.
செம்மணியில் கிருசாந்தி கொலைவழக்கைத் தவிர கடந்த 30 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளில் தொடர்புடைய ஒருவர் கூட இலங்கை அரசால் தண்டிக்கப்படவில்லை.
மேலும் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் அமைப்புசார் குற்றங்கள் என்பதை மனிதவுரிமை பேரவையால் கொண்டு வரப்பட்ட “இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் விசாரணை (OISL) அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்த அரச இயந்திரமும் சிங்கள பெளத்த பேரினவாதத்தில் ஊறித் திளைத்ததாக இருப்பதால் தற்சார்பான பொறிமுறை என் பதற்கு உள் நாட்டில் இடமே இல்லை.
கடந்த 16 ஆண்டுகளாக இலங்கையில் நான்கு தடவை நான்கு வெவ்வேறு கட்சிகள் ஆட்சிகளில் தொடர்ந்தன. ஆனால், பொறுப் புக்கூறல் தொடர்பில் எவ்வித முன் னேற்றமும் இல்லை. ஏனெனில் சிறிலங்கா அரசுக்கு தமிழர் களுக்கான நீதியை உறுதிசெய் வதற்கான மனோ நிலை இல்லை.
ஆயினும் மனிதவுரிமை பேரவை தொடர்ந்தும் உள்நாட்டுப் பொறிமுறையை வலியுறுத்திக் கொண்டிருப்பது இலங்கை அரசு மீதான நம்பிக்கையின் அடிப்படையில் இல்லை ஐநா மன்றம் என்ற வகையில் அதிலுள்ள அரசுகள் தத்தமது புவிசார் நலன்களுக்கு ஏற்ப முடிவு எடுக்கின்றன. எனவே, இலங்கை அதன் குற்றங்களில் இருந்து பாதுகாப்பதில்தான் தமது புவிசார் நலன்கள் இருப்பதாக பெரும்பாலான அரசுகள் கருதுவதால் இத்தகைய நீர்த்துப் போன தீர்மானங்கள் வருகின்றன.
தமிழர்களைப் பொறுத்தவரை நீதிக் கான போராட்டத்தில் சோர்வடைந்து விட வேண்டியதில்லை. ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதி கோருவதையும் கட்ட மைப்பு வகைப்பட்ட இனவழிப்பை தடுத்து நிறுத்துவதையும் முதன்படுத்தி ஓரணியில் திரள வேண்டும்.
இன்றைய உலக ஒழுங்கின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு இதில் பொருந்திப் போகக்கூடிய வகையிலும் தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஈழத்தமிழர்கள் தமது உத்திகளை வகுத்துக்கொண்டு புதிய சிந்தனையு டன் தம்மை வலுப்படுத்தி கொள்வதில்தான் அடுத்தக் கட்ட முன்னேற்றம் தங்கியிருக்கிறது. எனவே, தமிழர்கள் தம்மை தாமே ஒருங்கி ணைத்துக் கொள்வதே இப் போதைய உடனடி, அவசர பணியாகும் இதற்கு ஈழத்தில் இயங் கும் தமிழ்தேசிய கட்சிகளும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் ஒரு நேர் கோட்டில் ஒரு புள்ளி யில் ஒற்றுமையாக இணைந்து பயனிப்பதே காலத்தின்தேவை.