சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை

இலங்கையில் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.

அந்த குழுவானது எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை அந்த குழு நாட்டில் தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைந்த 7வது மதிப்பாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டின் உறுப்புரை IV ஆலோசனைகள் ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.