சம்பந்தரின் இல்லத்தில் அமெரிக்கத் தூதுவர்!

அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்த அக்கறையை சர்வதேசம் கொண்டிருக்க வேண்டுமென அமெரிக்க தூதரிடம் சம்பந்தர் வலியுறுத்தினார்.

மேற்படி சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு சம்பந்தர் விளக்குகையில்;
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்கள் குறித்தும், கிழக்கில் ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றியும் தூதருக்கு விளக்கினேன்.

13, 19 ஆவது திருத்தங்கள் பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் அவரிடம் முன்வைத்தேன்.

13 மற்றும் 19 ஆவது திருத்தங்களில் அரசு ஏற்படுத்த இருக்கும் மாற்றங்கள் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்பதையும் குறிப்பிட்டேன்.

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா, நோர்வே போன்ற நாடுகளுக்கு இலங்கை அரசு யுத்தம் முடிவுக்கு வந்த காலகட்டங்களின் போது தமிழ் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த பல வாக்குறுதிகளை வழங்கியிருந்ததையும் சுட்டிக்காட்டினேன்.

எனவே இந்த விடயங்கள் குறித்து சர்வதேச சமூகம் அதிகம் அக்கறை எடுக்க வேண்டிய அவசியத்தை அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தினேன்!