பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாளை கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தவுள்ளது.
அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பல செயற்பாடுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு போன்றவற்றை மையப்படுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
போராட்டம் இடம்பெறவுள்ள இடங்கள் மற்றும் காலம் பின்பு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.