கோத்தா இல்லையேல் கப்ரால்??

கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பான பிரச்சினை சூடுபிடித்துள்ள நிலையில், அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் மாற்றப்படுவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு பதிலாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கட்சியின் மாற்று வேட்பாளராக முன்மொழியப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் பெயரை பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இலங்கையின் பௌத்த மதத் தலைவர்கள் மும்மொழிந்துள்ளதாக கூறப்படுகின்றது. இவர் மத்திய வங்கியின் ஆளுநராகவும், ராஜபக்ஷ நிர்வாகத்தின் முக்கிய கொள்கை வகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

நேற்று கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் 2 ஆம் திகதி முதல் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்கு அவருக்கு எதிராக இருந்தால், கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு மாற்றாக கப்ராலின் பெயர் முன்மொழியப்படும் என்றும் அல்லது முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தேர்தலில் களமிறங்குவர் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.