கோட்டபயாவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பும் சிங்கள மக்களின் கொண்டாட்டமும்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய பேராளர் மாநாடு 11.08 இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வில் மகிந்த ராஜபக்ஸ கட்சியின் தலைமையை ஏற்று மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்நிகழ்வில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபயா ராஜபக்ஸவை மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

தான் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அவர் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுள்ளார்.

முதலில் நாடளாவிய ரீதியில் மத அனுஸ்டானங்களில் பங்கு பற்றவுள்ளார். இதன் போது அவரின் பாதுகாப்பிற்காக முன்னாள் இராணுவ அதிகாரி தலைமையில் தொண்டர் படை ஒன்று அமைக்கப்படும். அத்துடன் ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் ஐம்பது இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுவார்கள். தனது பாதுகாப்பு பிரதானியாக யோசித ராஜபக்ஸ செயற்படுவார்.

Jaffna gota கோட்டபயாவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பும் சிங்கள மக்களின் கொண்டாட்டமும்வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடனேயே களனி ரஜமகா விகாரைக்கு செல்லவுள்ளார். அதன் பின்னர் பேலியகொட வித்ியாலங்கா பிரவேனாவிற்கு சென்று வழிபாட்டில் ஈடுபடவுள்ளார்.

மறுநாள் (12.08) அநுராதபுரம் ருவான் வெலிசயவிற்குச் சென்று அங்கு உடுவே தம்மலோக தேரரால் நடத்தப்படும் வழிபாட்டில் கல்து கொள்வார். மறுநாள் (13.08) ஸ்ரீமகாபோதியை தரிசிக்கவுள்ளார். அத்துடன் கண்டிக்கு செல்கின்றார். 14.08இல் கண்டிக்கு சென்று மல்வத்து, அஸ்கிரிய மற்றும் நிக்காய மகா நாயக்கர்களின் ஆசியைப் பெற்றுக் கொள்வார். பின்னர் 15.08 கதிர்காமத்திற்கு செல்லவுள்ளார். அன்று மாலை கிரிவெலவில் 84ஆயிரம் விளக்குப் பூஜைக்கு ஏற்பாடு செல்லப்பட்டுள்ளது. அத்துடன் கதிர்காம மகா தேவாலயத்தில் நடைபெறவுள்ள சிறப்பு பூஜை வழிபாடுகளிலும் பங்குபற்றவுள்ளார்.

அதன் பின்னர் திஸ்ஸமகாராமய மற்றும் தேவிநுவர தேவாலயத்திற்கும் சென்று அதன் பின்னர் கொழும்பு நோக்கி பயணமாவார்.

இதற்கிடையில் கோட்டபயா ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தமிழர் தாயகப் பகுதிகளில் மகிந்தா தரப்பு ஆதரவாளர்களும் ஒட்டுக் குழுக்களும் வெடி கொழுத்தி கொண்டாடியுள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலும் மலையகத்தின் அனேக பகுதிகளிலும் வெடிகொழுத்தியும், பாற்சோறு பரிமாறியும் கொண்டாடியுள்ளனர்.

யாழ். திருநெல்வேலி பகுதியில் இளைஞர்கள் வெடி கொழுத்தி கோட்டபயாவின் படம் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோட்டபயாவின் பாதுகாப்பு பிரதானியாக வரப்போகும் யோசித ராஜபக்ஸ, மகிந்த ராஜபக்ஸவின் மகனாவார். இவர் முன்னாள் கடற்படை வீரராவார். 2006ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்டார். அடிப்படைப் பயிற்சிகள் எதுவும் இல்லாது, கடற்படையில் லெப்டினன்ட் ஆக பதவியேற்றார். இவரின் பயிற்சிக்குரிய செலவுகள் அனைத்தையும் மகிந்த ராஜபக்ஸவே அரசாங்க செலவிலிருந்து வழங்கியிருந்தார். பின்னர் மகிந்த ராஜபக்ஸவின் உதவியாளராக பணியாற்றினார்.

2015 மகிந்த தேர்தலில் தோல்வியடைந்து மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்த போது, இவரின் தகுதிகளை புறக்கணித்து,இவரை கடற்படையிலிருந்து பதவி நீக்கம் செய்தார்.