கொரோனா வைரஸ் – 44,000 இற்கு மேற்பட்டவர்கள் மரணம், 900,000 பேர் பாதிப்பு

கொரோனா வைரசின் தாக்கதால் உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை 44,000 இற்கும் அதிகமாகும் என ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று (01) தெரிவித்துள்ளது. 900,000 பாதிக்கப்பட்டுள்ளதுடன், 190,000 பேர் குணமடைந்துள்ளனர்.

இத்தாலியில் இன்று 727 பேர் மரணமடைந்துள்ளதுடன் இதுவரையில் 13,155 பேர் மரணமடைந்துள்ளதுடன், 110,574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினில் இதுவரையிலும் 9,053 பேர் மரணமடைந்துள்ளனர், இன்று 864 பேர் அங்கு மரணமடைந்துள்ளனர். 102,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரையில் 4,361 பேர் மரணமடைந்துள்ளதுடன், 203,608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் இல் 4,032 பேர் மரணமடைந்துள்ளர். இன்று அங்கு 509 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் இன்று 563 பேர் மரணமடைந்துள்ளனர், அங்கு இதுவரை 2,352 பேர் மரணமடைந்துள்ளதுடன், 29,474 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.