கொரோனா வைரஸ் – எதிர்கொள்ள முடியாது திண்டாடுகிறது சிறீலங்கா

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதனால் சீனாவும், அதனைச் சார்ந்து நிற்கும் நாடுகளும் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதுடன், உலக நாடுகளும் அதிகளவு நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

சீனாவின் வுகான் பகுதியில் இருந்து பரவிய இந்த கிருமிகளின் தாக்கத்தால் இதுவரையில் 132 பேர் மரணமடைந்துள்ளதுடன், 5974 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தொற்றுக்கு உள்ளாகியவர்களில் 563 பேர் ஆபத்தான நிலையிலும், 127 பேர் மிகவும் ஆபத்தான நிலையிலும் உள்ளனர் என சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏறத்தாள 10,000 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், 103 பேர் பூரணமாகக் குணமடைந்து வைத்தியசலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சீனா பணியார்களை தனியாக வைக்க உத்தரவு

சிறீலங்காவில் உள்ள சீனா நிறுவனங்களில் பணியாற்றும் சீனா பணியாளர்களை தனியாக தங்கவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் புதுவருட நிகழ்வுக்கு நாடு சென்று திரும்பியவர்களை தனியாக தங்கவைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

corona கொரோனா வைரஸ் - எதிர்கொள்ள முடியாது திண்டாடுகிறது சிறீலங்காஅது மட்டுமல்லாது, சிறீலங்காவில் உள்ள சீன நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், பணியாளர்கள் உணவு விடுதிகளில் கூட்டமாக உணவு உட்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அவசர நடவடிக்கை பிரிவு

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அசவர நடவடிக்கை பிரிவு ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஆடம்பரவிடுதிகள், உணவு விடுதிகள், களியாட்ட விடுதிகள் மற்றும் அழகுசாதன நிலையங்களுக்கு செல்லும் சீனா சுற்றுலாப்பயணிகள் அங்கு அனுமதிக்கப்படாது திருப்பி அனுப்பப்படுவதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

பொருளாதாரம் சீரழிவு

சிறீலங்காவுக்கு வருகைதரும் சீனா நாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்ததால் சிறீலங்கா அரசு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், சீனாவின் பங்குச்சந்தை பாதிப்படைந்து வருவதுடன், உலகின் பங்குச்சந்தைகளும் ஆட்டம் கண்டுள்ளன. குறிப்பாக ஆசியாவின் பங்குச்சந்தை அதிக பாதிப்புக்களைச் சந்தித்துள்ளது.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாது ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் பாதிப்படையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகளை தொடர்ந்து மூட உத்தரவு

வைரஸ் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியாது உள்ளதால் பாடசாலைகளை தொடர்ந்து மூடுமாறு கொழும்பு கத்தோலிக் பேராயர் மல்கொம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.