கூட்டுறவு துறையில் சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கான வருடாந்த மீளாய்வும்

கூட்டுறவு துறையில் சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கான வருடாந்த மீளாய்வும் கௌரவிப்பு நிகழ்வும் (08) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
நிலைபேறான அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு அகம் நிறுவனம் மாவட்ட செயலகத்துடன் இணைந்து பல்வேறு துறை சார்ந்த பிரிவுகளில் பணியாற்றி வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக 2023ம் ஆண்டின் வீட்டுத் தோட்டம், சேமிப்பு  கடன் வழங்கல், சிரமதானம் போன்ற செயற்பாடுகளில் சிறப்பாக செயற்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை பகுதிகளில் உள்ள கூட்டுறவு அமைப்புக்கள்  கௌரவிக்கப்பட்டதுடன்  இவ் அமைப்பில் இணைந்து பணியாற்றிய  கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில்  திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை கூட்டுறவு ஆணையாளர், கணக்காளர், கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனம் we effect நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர், அகம் நிறுவனத்தின் பணிப்பாளர், மாவட்ட பெண்கள்  அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் மற்றும் கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.