காசா மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் தாக்குதல்!

காசா மருத்துவமனையின் வளாகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள்  மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அக்கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்த்துள்ளதோடு பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை இஸ்ரேல் மத்திய காசாவின் டெய்ர்அல்பலா வளாகத்தில் உள்ள அல்அக்சா மருத்துவமனை மீது தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்தன.

இதில் நால்வர் கொல்லப்பட்டனர். பெருமளவு சிறுவர்களும் பெண்களும் காயமடைந்தனர் என ஹமாஸின் மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.