இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் சாப்பிட ஏதும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
காசாவில் “பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு” காரணமாக மேலும் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 92 குழந்தைகள் உள்ளடங்கலாக 162 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா நகரின் தென்மேற்கே உதவி வாகனத்துக்காக காத்திருந்த பொதுமக்களை இஸ்ரேலியப் படைகள் குறிவைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 90 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 60,332 பேர் கொல்லப்பட்டதுடன் 147,643 பேர் காயமடைந்தனர்.