கரையொதுங்கும் கடல் உயிரினங்கள் – காரணம்  கப்பல் தீ விபத்தா?

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு கடற் கரை ஓரங்களில் தொடர்ச்சியாக இறந்த கடல் வாழ் உயிரினங்களின் உடலங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில் இன்றையதினமும் 10 ஆமைகள், ஒரு டொல்பின் , கடற்பறவைகள், மற்றும் பெருமளவு மீன்கள் என்பன இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.

இந்துருவா, கொஸ்கொட, பயகலா, வட்டுவா மற்றும் தெஹிவளை ஆகிய கடற்கரைகளிலேயே இவை கரை ஒதுங்கியுள்ளன.

இந்த உயிரினங்களின் இறப்புக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) தெரிவித்துள்ளது.