கனடாவின் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இது இரு நாடுகளுக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தியது.
அதன் விளைவாக சில வாரங்களுக்கு முன்பு கனடாவின் ப்ராம்ப்டன் நகரிலுள்ள இந்துக் கோவிலை சேதப்படுத்தி பக்தர்களையும் தாக்கிய சம்பவம் இடம்பெற்றது.
இந்தியாவை பழிவாங்கும் எண்ணத்துடன் நடத்தப்பட்ட இச் சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அதன்படி, பாதுகாப்பு தொடர்பில் இந்திய தூதரகம் தனது நிகழ்ச்சிகளை இரத்து செய்துள்ளது. ப்ராம்ப்டனில் உள்ள திரிவேணி கோவிலில் நடக்கவிருந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
