யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியுடன் இணைவதும், மட்டக்களப்பில் ரிம்விபியுடன் இணைவ தும் ஒன்றுதான்.
இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பதில் தலைவர் சி வி கே சிவஞானம் உள்ளூராட்சி சபைகளில் யாழ்ப்பாணத்தில் ஆட்சிகளை அமைக்க ஈபிடிபி டக்ளஸ் தேவனாந்தாவின் காலடியில் சரணாகியது ஒரு வெட்ககேடான ஏற்க முடியாத கண்டிக்கத்தக்க செயல்.
கதிரைகளை தக்கவைப்பதற்காக கழுதைகளில் எல்லாம் ஏறமுற்படுவது அரசியல் அநாகரிக
மாகும். தமிழ்தேசிய கொள்கைகளை மறப்பதும், கடந்த காலங்களில் தமிழ்தேசியத்தை காட்டிக் கொடுத்தவர்களுடன் கை கோர்பதும் தமிழரசுக்கட்சிக்கு எதிர்காலத்தில் சாபக்கேடாகவே அமையும்.
மட்டக்களப்பில் ரிஎம்விபி பிள்ளையானும் தமிழ்தேசியத்தை காட்டிக்கொடுத்த துரோக அரசியலை செய்த ஒருவர், யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி டக்ளஸும் தமிழ்தேசியத்தை காட்டிக்கொடுத்த துரோக அரசியலை செய்தவர் என்பதால் இவர்கள் இருவருடனும் இணை ந்து ஆட்சியமைப்பது எந்த வகையில் நியாயம் ?
ஆட்சியமைக்க ஆசனங்கள் எண்ணிக்கை இல்லை எனில் கௌரவமாக எதிர்கட்சியில் இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆட்சியில் பதவிகளில் இருப்பதால் மலையை புடுங்கி மாமரத்தில் சாத்தவும் முடியாது.
கடந்த காலங்களைப்போன்று நிதி வழங்கல் ஒதுக்கீடுகள் தேசிய மக்கள் சக்தி அரசால் கிடைக்க கூடிய வாய்ப்புகள் மிக அரிதாகவே இம்முறை உண்டு.
தேசியதலைவரை போதை பொருட்கள் கடத்தியவர் என பாராளுமன்றத்தில் வெளிப்படையாக பேசிய டக்ளஸ்தேவானந்தாவுடன் தமிழரசுக்கட்சி கதிரைகளுக்காக சோரம்போக நினைத்திருந்தால் அதனை உடனே நிறுத்தவேண்டும்.
பதில் தலைவர் சிவஞானம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி போன்று தமிழரசுக் கட்சியை வழிநடத்தப்பார்ப்பதை கைவிட்டு கொள்கை அரசியலில் செயற்பட தன்னை மாற்றவேண்டும். இல்லை எனில் ஏற்கனவே பொதுச்சபையால் தலை வராக ஏற்றுக்கொண்ட சிவஞானம் சிறிதரனுக்கு தலைவர் பதவியை கொடுத்து தான் விலகி இருப்பது நல்லது.
இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பதவிக்கான கட்சி இல்லை. அது தமிழ்தேசிய அரசியல் கொள்கைக்காக இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் உரிமையை வென்றெடுக்கும் வேலைத் திட்டங்களை முன்எடுக்கும் கட்சி என்பதை அனை வரும் புரியவேண்டும்.
கடந்த 2024, பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான எட்டு தமிழரசுக்கட்சி மக்கள் பிரதிநிதிகளும் மௌனத்தை கலைத்து வெளிப்படையாக ஈபிடிபி கட்சியுடன் இணக்கப்பாட்டுக்கு வருவது சரியா தவறா என்பதை கூறவேண்டும். அரசியல் குழு, மத்தியகுழு எல்லாம் தனிநபர் திசைகாட்டலுக்கு தலை அசைக்காமல் இந்த விடயத்தில் வெளிப்படையாக கருத்துக்களை கூறவேண்டும்.
மாவீரர்களின் தியாகம், மண்ணில் இழந்த இழப்புக்கள்,கடந்தகாலங்களில் மேற்கொண்ட கவன ஈர்ப்பு போராட்டங்கள் எல்லாவற்றையும் குழிதோண்டி புதைத்துவிட்டு துரோகங்களுடன் கைகோர்த்து எமது உரிமை பயணத்தை உதாசீனம் செய்வது இனத்துரோகமாகும்.