கடல்களில் இருந்து ஆண்டுதோறும் 6 பில்லியன் தொன் மண் அகழப்படுகின்றது

உலகில் உள்ள சமூத்திரங்களில் இருந்து ஆண்டுதோறும் 6 பில்லியன் தொன் மண் மற்றும் பாறைகள் அகழ்ந்தெடுக்கப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிவடைவதுடன், சூழலும் பாதிப்படைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சூழல்பாதுகாப்பு அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடற்கரைகளில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் மிகவும் ஆபத்தான கட்டத்தை நெருங்கியுள்ளது. உரியினங்களின் பரம்பல்கள் வீழச்சியடையலாம், உயிரினங்களின் வாழ்விடங்களும் அழிவடைகின்றது என ஐ.நா அமைப்பின் பஸ்கல் பெடோசி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் கடற்கரைகளில் மேற்கொள்ளப்படும் அகழ்வுகள் தொடர்பான தகவல்களை ஐ.நா சேகரித்து வருகின்றது. அதற்கு உதவியாக செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்த அது திட்டமிட்டுள்ளது.

அகழ்வுப்பணிகளில் ஈடுபடும் கப்பல்களை கண்காணிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலகில் ஏறத்தாள ஆண்டு தோறும் 50 பில்லியன் தொன் மண் மற்றும் கற்கள் பயன்படுததப்படுகின்றன. அதில் 6 பில்லியன் தொன்கள் கடல்களில் இருந்து பெறப்படுகின்றன என அவர் மேலும் தெரிவத்துள்ளார்.

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதி, வட கடல், தென்கிழக்கு ஆசிய கடல் ஆகியவையே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்னாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் கடல்வள அகழ்வை தடை செய்துள்ளன.