கடந்த ஒரு வருடமாக காசா பகுதி மீது இஸ்ரேல் மேற் கொண்டுவரும் தாக்குதல்க ளில் இதுவரையில் 16756 சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன், அங்கு 41990 பேர் கொல்லப்பட்டும் ஏறத்தாள ஒரு இலட்சம் மக்கள் காய மடைந்தும் உள்ளதாக ஐக்கிய நாடு கள் சபை தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட சிறுவர்க ளில் பலர் காசா பகுதி மீது இஸ் ரேல் மேற்கொண்டு வரும் தொடர் பொருளாதார தடைகளினால் பாதிப்புக்களைச் சந்தித்த வாறு வாழ்ந்து வந்தவர்கள். அந்த பிராந்தியம் சிறுவர்களின் புதை குழியாக மாறி வருகின்றது. 17,000 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் தமது பெற்றோர்களில் ஒருவரை அல்லது இருவரையும் இழந்து வாழ்கின்றனர் என ஐ.நா மேலும் தெரிவித்துள்ளது.
பல ஆயிரம் மக்களின் உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கலாம் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அங்கு சராசரியாக தினமும் 115 பேர் கொல்லப்படுவதுடன், 266 பேர் காய மடைகின்றனர் அவர்களில் 46 பேர் சிறுவர்கள், 31 பேர் பெண்கள். 902 குடும்பங்கள் முற்றாக அழிந்துள்ளன என அது மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, காசா முற்றாக தரைமட்டமாவதற்கு முன்னர் உலகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தா னியாவைத் தளமாகக் கொண்ட Medical Aid for Palestinians என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கு எஞ்சியுள்ள வைத்தியசாலையை யும் அழித்து ஒரு முழுமையான அழிவை ஏற்படுத்த இஸ்ரேல் முயன்று வருவதாக அது குற்றம் சுமத்தியுள்ளது.
