ஐ.நா தீர்மானம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது – அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவந்த தீர்மானம் தொடர்பில் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் குறித்து விரிவான பேச்சுக்களை மேற்கொண்டுள்ளதாக சிறீலங்காவுக்கான பயணத்தை நிறைவு செய்து வெளியேறும் அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கான செயலாளர் அலிஸ் வெல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாகது:

சிறீலங்கா அரசுடன் மேற்கொள்ளப்படவுள்ள படைத்துறை மற்றும் பொருளாதார உடன்பாடுகள் குறித்து பேசவில்லை. அவை தொடர்பில் பொதுத்தேர்தல் நிறைவுபெற்றதும் கலந்துரையாடப்படும்.

சிறீலங்கா நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததும், இந்த உடன்பாடுகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றம் தொடர்பில் ஆய்வு செய்வோம். படைத்துறை ஒப்பந்தம் 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, 18 அமெரிக்க கடற்படைக் கப்பலிகளின் பயணம் என்பதே அதன் வெற்றி தான்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டுவந்த தீர்மானம் தொடர்பில் விரிவான பேச்சுக்களை மேற்கொண்டிருந்தேன். காணிகள் விடுவிப்பு, காணாமல்போனவர்களுக்கான நீதி தொடர்பில் ஆராயப்பட்டது.

சிறீலங்கா எல்லா நாடுகளுடனும் நட்புறவைப் பேண வேண்டும். பல நா-டுகளைப்போலவே சிறீலங்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுகளின் முதலீடுகள் தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.