‘ஏறுதழுவுதல்’ மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

தமிழ் நாட்டில் தைப்பொங்கல் மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளில் போகிப் பொங்கல், உழவர் பொங்கல்(சூரியப் பொங்கல்), மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகின்றது. பொங்கல் நிகழ்வின் போது அனைவராலும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக ஜல்லிக்கட்டு அமைகின்றது.
பொங்கல் கொண்டாட்டங்கள்.

முதலில் போகிப் பொங்கல் பற்றி பார்ப்போம். மார்கழி இறுதி நாளை அதாவது தைப்பொங்கலுக்கு முதல் நாளை பழையன கழிதல் என்பதற்கமைய போகிப் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது.

இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது சூரியப் பொங்கல் ஆகும். இது உலகில் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படும் ஒரு பொதுவான நிகழ்வாகும். உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக இப்பொங்கல் கொண்டாடப் படுகிறது.அதே போல மூன்றாவது நாளாக, தங்கள் உழவிற்கு உதவி செய்த மாட்டிற்கு நன்றி தெரிவித்து மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகின்றது.இதுவும் பொதுவாக எல்லா நாட்டு தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும்.dfearg 1537262920e 'ஏறுதழுவுதல்' மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

நான்காவது நாள் நிகழ்வாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வில் இந்நாளில் மக்கள் நெடு நாளாக கண்டிராத  நமது உற்றார் உறவினரை காணும் நாளே காணும் பொங்கல் என கொண்டாடுகின்றனர். இந்நாளில்  தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர்.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும். இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில், முகத்தில் பூசிக்கொள்வார்கள். இது பண்டைய கால வழக்கமாகும்.

உழவர் திருநாளில் முக்கியமான நிகழ்வாக ஜல்லிக்கட்டு அமைகின்றது. ஜல்லிக்கட்டை ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது  ஜல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்று அழைப்பர். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டே ஜல்லிக்கட்டாகும். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஆண்டு தோறும்  தைமாதத்தில் பொங்கல்  திருநாளையொட்டி நடத்தப்படுகின்றன. jallikattu34 1547725878 'ஏறுதழுவுதல்' மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘ஜல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது.

2008 சனவரியில் பொங்கல் விழாவுக்குச் சில நாட்களுக்கு முன்  ஜல்லிக்கட்டில் காளைகள் கொடுமை செய்யப்படுவதாகப் புகார் சொல்லி, விலங்குகள் நல வாரியம் மூலம் மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தார்.  இதனால் இந்திய உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. ஒருசில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மறுமுறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்த போதும். ஏதோ ஒரு காரணத்தினால் ஜல்லிக்கட்டு நிகழ்வை மத்திய அரசு தடுத்தே வந்தது. 2014 மே 7இல் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.jallikattu 1 'ஏறுதழுவுதல்' மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

காளைகள் துன்புறுத்தப்படுவதால் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. 2011ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் துறையின் அறிக்கையை மாற்றி இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. மீண்டும் உச்ச நீதிமன்றம் மூலம் 01-12-2016 அன்று மறுபடியும் தடை விதித்தது.

தங்கள் உரிமைகளைப் பெறவும், பாரம்பரிய கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக் கோரியும் 2017 சனவரி 16ஆம் திகதி மரீனா கடற்கரையில் சுமார் 75பேர் கூடி தங்களின் உரிமைகளுக்காக போராட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு ஒன்று கூடினர். அன்று பிற்பகலில் 5000பேர் ஆகி போராட்டம் 23ஆம் திகதி வரை   இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்றது. பொதுமக்கள், மாணவர்கள் என அதிகரித்த போராட்டக்காரர்கள் அரசியல்வாதிகள், நடிகர்களை தங்கள் போராட்டத்தில் இணைக்க மறுத்தனர்.Jallikattu Supporters Around The World Save Jallikattu and We Do Jallikattu 'ஏறுதழுவுதல்' மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

முழுவதும் பொதுமக்கள் போராட்டமாக அமைந்தது. தலைமை என்ற ஒன்று இல்லாது, மக்கள் அனைவரும் புரிந்துணர்வுடன் போராட்டத்தில் இறங்கினர். ஆண்,பெண், குழந்தைகள், வயோதிபர்கள் என்ற அனைத்து தரப்பினரும் இரவு பகலாக கடற்கரையில் நின்று போராடினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உணவு, தண்ணீர், போக்குவரத்து வசதிகளை பொது மக்களே ஏற்படுத்திக் கொண்டனர்.

போராட்டத்தை குழப்பும் வகையில் அந்தப் பிரதேச மின்விளக்குகளை அரசு அணைத்தது. இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்கள் கைபேசிகள் மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தினர்.Jallikattu mobile 'ஏறுதழுவுதல்' மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

இது பார்ப்பதற்கு வானத்திலுள்ள விண்மீன்கள் கீழே இறங்கியது போல இருந்தது. போராட்டத்தை தடுப்பதற்காக பொலிசார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டனர். கலைந்து போகுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் இதை செவிசாய்க்கவில்லை. இந்தப் போராட்டங்கள் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி போன்ற சிறப்புப் பெயர்களால் குறிப்பிடப்பட்டன.

தமிழகத்தை தாண்டி வேறு மாநிலங்களிலும், இலங்கை உட்பட வேறு நாடுகளிலும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகியது. சமூக வலைத்தளங்களின் வழியாகவே பெருந்திரளான இளைஞர்களைத் திரட்டி அமைதி வழியில் போராட்டங்களை நடத்தினர்.  சமூக இணையதளங்களின் வாயிலாக ஒருங்கிணைந்த இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் இந்தப் போராட்டங்களை நடத்தினர்.93649753 five 'ஏறுதழுவுதல்' மெரினாவில் ஏற்றமிகு போராட்டம் -கல்யாணி

இந்தப் போராட்டத்திற்கு மத்திய அரசு பணிந்தது. தமிழர் பிரதேசங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு பொங்கல் நிகழ்வின் போதும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வெற்றி கொள்ளப்பட்ட போராட்டமாக இது மட்டுமே அமைகின்றது. இதன் பின்னரோ இதற்கு முன்னரோ இப்படியான ஒரு போராட்டம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.