எனது அரசியல் பயணம் நிற்காது – மீண்டும் பாராளுமன்றம் வருவேன் என்கிறாா் டயானா

Diana Gamage 1 எனது அரசியல் பயணம் நிற்காது - மீண்டும் பாராளுமன்றம் வருவேன் என்கிறாா் டயானாதனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது எனவும் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவேன் எனவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த டயானா கமகே நேற்று வியாழக்கிழமை நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய டயானா கமகே, இந்நாட்டின் பாராளுமன்றத்தில் அமரக்கூடிய சட்டத் தகைமை எதுவும் கிடையாது என உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இந்தநிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஊடகவியலாளர் சந்திப்பில் அழைப்பு விடுத்த டயானா கமகே, “எனது அரசியல் பயணம் இத்துடன் நிற்காது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தப் பாராளுமன்றம் கலைக்கப்படும். எதிர்காலத்தில்
நான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நான் எப்போதும் ஜனாதிபதியை ஆதரிப்பேன். ரணில் விக்கிரமசிங்க மற்றவர்கள் மறைந்திருந்த போது இந்த நாட்டைக் கைப்பற்றினார். நான் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவேன்”
என்றார்.