உலகில் பல மாற்றங்களை நிகழ்த்தப்போகும் மீளமுடியாத புதிய உலக ஒழுங்கு – வேல்ஸில் இருந்து அருஸ்

உக்ரைனில் 2022 ஆம் ஆண்டு ஆரம்பித்த போர் இரண்டு வருடங்கள் கடந்து பயணித்தாலும், அது என்ன நோக்கத்தற்காக யாரால் ஆரம்பிக்கப்பட்டது என்ற கேள்விகள் தற்போதும் பலரின் மனதில் எழுந்தவண்ணம் தான் இருக்கும். உக்ரைன் ரஸ்ய போர் திடீரென ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல. இரு தரப்பும் நன்கு திட்டமிட்டு மோத தீர்மானித்த களமே அதுவாகும்.

 

Iranian missile உலகில் பல மாற்றங்களை நிகழ்த்தப்போகும் மீளமுடியாத புதிய உலக ஒழுங்கு - வேல்ஸில் இருந்து அருஸ்அமெரிக்கா தலைமையிலான ஒருமுனைவாக்கப்பட்ட உலக ஒழுங்கின் நீண்டகால இருப்புக்கு முதலாவது அச்சுறுத்தலாக இருப்பது ரஸ்யா தான். ரஸ்யாவிடம் உள்ள அணுவாயுதமும் அதன் போரிடும் வலுவும் தான் காரணம். அதனை அழித்துவிட்டால் அடுத்ததாக வடகொரியா, ஈரான், சீனா என அவர்களின் இலக்கை இலகுவாக மேற்குலகம் எட்டிவிடும்.

எனவேதான் சோவியத்து ஒன்றியத்தை எதிர்கொள்ளவென உருவாக்கப்பட்ட வட அந்திலாந்திக் கூட்டமைப்பு எனப்படும் நேட்டோ கூட்டமைப்பு சோவித்து ஒன்றியத்தின்  வீழ்ச்சியுடன் கலைக்கப்படாமல் மேலும் விரிவாக்கப்பட்டது. கிழக்கு நோக்கி நேட்டே கூட்டமைப்பின் விரிவாக்கம் இருக்காது என வார்த்தைகளில் கூறப்பட்டாலும் தமது வார்த்தைகளை அவர்கள் காப்பாற்றவில்லை.

அனால் மாறாக ரஸ்யாவின் வீழ்ச்சியுடன் ஐரோப்பாவில் அகண்ட இராட்சியம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் 2014 ஆம் ஆண்டு உக்ரைனின் ஆட்சிமாற்றத்துடன் உருவாக்கப்பட்டது. அதனை உணர்ந்துகொண்ட ரஸ்யாவும் அதனை எதிர்கொள்வதற்கான முதல்படியாக உக்ரைனில் உள்ள கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கிரைமியா பகுதியை கைப்பற்றி கருங்கடலில் உள்ள தனது கடற்படைத்தளத்தை முதலில் தக்கவைத்துக்கொண்டது.

03China Russia Energy 1 superJumbo உலகில் பல மாற்றங்களை நிகழ்த்தப்போகும் மீளமுடியாத புதிய உலக ஒழுங்கு - வேல்ஸில் இருந்து அருஸ்2010 ஆம் ஆண்டு ரஸ்யாவின் பொருளாதாரம் சரிவை சந்தித்த சமயம் பார்த்து 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்து கிரைமியாவை கைப்பற்றியதை காரணமாக வைத்து ரஸ்யா மீது தடைகளைக் கொண்டுவந்து முதலில் பொருளாதார ரீதியாக முடக்கும் செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

பொருளாதாரத்தால் பலமாகாகத தன்னால் அன்றைய போரை எதிர்கொள்ள முடியாது என ரஸ்யா உணர்ந்திருந்தது. எனவே தான் தன்னை பொருளாதார மற்றும் படைத்துறை ரீதியாக பலப்படுத்திய ரஸ்யா ஒரு போரை 2022 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. அதாவது 2014 ஆம் ஆண்டு முழு அளவில் ஆரம்பமாகவேண்டிய போரை ரஸ்யா 8 வருடங்கள் பின்போட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் நேட்டோவும் உக்ரைன் படையினரை நன்கு பலப்படுத்தியே வந்திருந்தது.

அதாவது நேட்டோவும், ரஸ்யாவும் தம்மை தயார்படுத்திக் கொண்டு இறங்கிய களமுனையாகவே உக்ரைன் உள்ளது. எனினும் மேற்குலகத்தின் படைப்பரம்பல் என்பது தனது வர்த்தக உறவுகளுக்கு பாதகமானது என்பதை உணர்ந்த ரஸ்யா நேட்டோ என்ற அமைப்பை செயல்திறனற்றதாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட போராகவே தற்போதைய போர் பார்க்கப்படுகின்றது.

எனவே தான் ஆபிரிக்கா நாடுகளில் தொடர் படைத்துறைப் புரட்சிகளை ஏற்படுத்தி பல நாடுகளை தன்வசப்படுத்திய ரஸ்யா, தனது அடுத்த விரிவாக்கத்தை அரபு நாடுகள் நோக்கி திருப்பியுள்ளது. ஈரானுக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி ஈரானை தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சிபெறவைத்தது மட்டுமல்லாது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலின் மூலம் அரபுநாடுகளிலும் ஈரான் ஊடாக ஒரு களமுனையை திறந்துள்ளது.

கடந்த ஆறு மாதமாக காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களினால் 33500 மக்கள் கொல்லப்பட்டும், 76000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் உள்ளதுடன், காசா நிலப்பரப்பில் பெரும்பகுதி அழிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்பட்ட அழிவுகளை புனரமைப்பதற்கு 18 பில்லியன் டொலர்கள் தேவை என கணிப்பிடப்பட்டிருப்பது ஒருபுறம் இருக்க, இன்றுவரை ஹமாஸை முற்றாக அழிப்பதற்கோ அல்லது அதன் தலைமைப்பீடத்தை அழிப்பதற்கோ இஸ்ரேலினால் முடியவில்லை என்றே கருதப்படுகின்றது.

இந்த புதிய களமுனை உக்ரைன் களமுனையின் உக்கிரத்தை குறைத்துள்ளதுடன், பல தசாப்தங்களாக மத்தியகிழக்கில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டணி கொண்டிருந்த ஆழுமையை ஆட்டம்காண வைத்துள்ளது.

ஹமாசுடன் பல சுற்றுப் பேச்சக்கள் நடத்தப்பட்டபோதும் இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் அவர்களை ஒரு இணக்கப்பாட்டுக்கு கொண்டுவர இஸ்ரேலினாலும், அமெரிக்காவினாலும் முடியவில்லை. அதற்கான காரணம் அரபு நாடுகளின் பின்னால் பல்முனைவாக்கம் பெற்றுவரும் இந்த புதிய உலகின் முக்கிய சக்திகள் நிற்பதுதான்.

Ukrai Poland உலகில் பல மாற்றங்களை நிகழ்த்தப்போகும் மீளமுடியாத புதிய உலக ஒழுங்கு - வேல்ஸில் இருந்து அருஸ்அதாவது உக்ரைன் போருடன் ஆரம்பித்த புதிய உலக ஒழுங்கு தற்போது பாலஸ்தீன – இஸ்ரேல் போருடன் மிக வேகமாக நகர்ந்துவருகின்றது. மேற்குலக நாடுகளின் மனிதாபிமான மற்றும் மனிதநேய அமைப்புக்கள், அனைத்துலக நாணயநிதியம் போன்ற அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள், ஊடகதர்மம் பேசும் அமைப்புக்கள் என்பன தமது முகத்திரை அகன்று சுய உருவம் காண்பித்து நிற்கும் நிலையை கடந்த இரண்டு வருடங்கள் எற்படுத்தியுள்ளது.

கடந்த 76 வருடகால பாலஸ்தீன விடுதலைப்போருக்கான முடிவை இந்த புதிய உலக ஒழுங்கு கொண்டுவரும் என நம்பப்படுகின்றது. எனவே தான் இந்த போரின் முடிவு என்ன என கேட்டபோது சுதந்திர பாலஸ்தீன நாடு உருவாகும் என ரஸ்யா பதிலழித்துள்ளது. பாலஸ்தீன நாட்டுக்கான ஆதரவுகளும் உலகில் அதிகரித்துவருகின்றது.

தமக்கு கிடைத்துவரும் இந்த ஆதரவுகளை மேற்குலகத்தின் அற்ப சலுகைகளுக்காக இழந்துவிட பாலஸ்தீன மக்களும் விரும்பவில்லை. எனவேதான் எத்தனை இழப்புக்கள் வந்தாலும் உறுதியாக எதிர்த்து நிற்கின்றனர்.

இன்று பாலஸ்தீனத்தில் மேற்கொள்ளும் அதே இனப்படுகொலை தான் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழ் மக்களுக்கு நிகழ்ந்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும் தற்போது ஆட்டம் கண்டுநிற்கும் ஓருமுனைவாக்கப்பட்ட உலக ஒழுங்கே காரணம்.

1948 ஆம் ஆண்டில் இருந்து பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட திட்டமிட்ட கூட்டுப்படுகொலைகளின் எண்ணிக்கையை விட ஈழத்தில் இலங்கை மற்றும் இந்திய அரசுகள் மேற்கொண்ட படுகொலைகள் அதிகம். அதாவது முள்ளிவாய்க்கால் வரை அதன் எண்ணிக்கை 160 இற்கும் அதிகமானது. காசாவில் ஆறுமாதத்தில் 33500 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் முள்ளிவாய்க்காலில்  சில வாரங்களில் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது காசாவில் இடம்பெறும் படுகொலைகளை பார்த்து நிற்பதுபோலவே ஐக்கிய நாடுகள் சபை தமிழீழத்திலும் நிகழந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்து நின்றது.

அதனை தடுத்துநிறுத்துவதற்கு அவர்கள் எந்தவொரு காத்திரமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. ஒரு சில நாடுகளின் பூகோள அரசியல் நலன்களுக்காக ஒரு இனம் அழிக்கப்பட்டு அந்த இனத்தின் நாடு பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட நிகழ்வு நடந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன.

விடுதலைப்போர் என்பது பல தடைகளைத் தாண்டித்தான் பயணிப்பதுண்டு, அது ஒரு தலைவரின் வாழ்நாளில் நிகழ்ந்துவிடுவதில்லை. போரட்டத்தை பல தலைமுறைகள் சுமந்து செல்லவேண்டும். அதனை தான் நாம் பாலஸ்தீனப் போரில் பார்க்கின்றோம். தற்போது ஏற்பட்டுள்ள இந்த பல்முனைவாக்கப்பட்ட உலக ஒழுங்கு மீண்டும் பழைய உலக நடைமுறைக்கு திரும்பப்போவதில்லை. அதற்கான சமிக்கைகளே தென்படுகின்றன.

ஆனால் இந்த புதியமாற்றம் உலகில் பல நாடுகளிலும் அங்கு வாழும் பல இனங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அதனை நாம் ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் மாற்றங்களின் ஊடாக காண்கின்றோம். ஆசியாவும் அதற்கு விதிவிலக்காகாது. எனவே அதனை சரியாககணித்து நாமும் எமக்கான விடுதலையை பெறுவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்காக அணிதிரளவேண்டும்.