உலகத்தமிழர் பேரவை அமைப்பினரோடு சிங்கள புலம் பெயர் அமைப்புக்கு தொடர்பு உண்டு..!

புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியத்தை இலக்காகக் கொண்ட ஈழத்தமிழ் அமைப்புகளின் பலத்தை அறிந்த ஒரு பின்னணியிலேதான், சிங்கள அரசியல் தலைவர்கள் பிரித்தானியா, அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் குறிப்பிட்ட சில தமிழ் அமைப்புகளையும் தனிநபர் குழுக்களையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகும் என ஊடகவியலாளர் நிக்‌ஷன் 25/12/2023, எழுதிய “ஆபத்தை அறிந்து நுட்பமாகக் கையாளும் சிங்களத் தலைவர்கள்” எனும் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் அனைவரும் இலங்கை அரச கட்டமைப்புக்குள் இணைந்து வாழத் தயார் என்ற பொய்யான பரப்புரையின் ஊடாக புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடா போன்ற நாடுகளில் கணக்கைக் காண்பிக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அண்மையில் இலங்கைத் தீவுக்கு விஜயம் மேற்கொண்ட  புலம்பெயர் தனிநபர்க்குழுவான சுரேன் சுரேந்திரன் மற்றும் கனடிய தமிழர் பேரவை முட்டுக்கொடுக்கும் உலகத்தமிழர் பேரவை என்ற அமைப்பின் செயற்பாடுகளோடு சிங்கள புலம் பெயர் அமைப்பும் முட்டுக்கொடுத்து இயங்கிவருவதற்கு கனடாவில் வலுப்பெறும் ஈழத்தமிழர் சார்பான அரசியலைத் தடுக்கும் நோக்கம் உள்ளது என்பது வெளிப்படை என அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.