உக்ரைன் போர் ஐரோப்பாவை அழிக்கின்றது – போரல்

உக்ரைன் – ரஸ்ய போர் மற்றும் பாலஸ்தீன – இஸ்ரேல் போர் தொடர்பில் நாம் தீவிரமாக செயற்பாடாது விட்டால் ஐரோப்பா மிகப்பெரும் அளிவைச் சந்திக்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர பேச்சாளர் ஜோசப் போரல் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை(20) பூகோளஅரசியல் தொடர்பான மாநாட்டில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரஸ்யா இந்த போரில் வெற்றியீட்டினால் ஐரோப்பாவுக்கு ஆபத்தாக முடியும். அதேபோலவே பாலஸ்த்தீன – இஸ்ரேல் போரை நாம் நிறுத்தாவிட்டால் அதுவும் ஐரோப்பாவுக்கு ஆபத்தாகவே முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, உக்ரைனுக்கு 50 பில்லியன் டொலர்கள் நிதியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்குவதற்கு ஹங்கேரி உட்பட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவும் தொடர்ந்து நிதியை வழங்க மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.