உக்ரைன் அதிபரின் முன்னாள் ஆலோசகர் படுகொலை!

உக்ரைன் அதிபர் வொலடிமீர் செலன்ஸ்கியின் முன்னாள் ஆலோசகரும் வழக்கறியருமான அன்ரே போட்னோவ் கடந்த புதன்கிழமை(21) ஸ்பெயினில் வைத்து சுட்டு படுகொலை செய் யப்பட்டுள்ளார்.
தனியார் பாடசாலையில் உள்ள தனது பிள்ளைகளை கூப் பிடச் சென்ற சமயம் அவரை அணுகிய இரண்டு அல்லது மூன்று ஆயுததாரிகள் அவர் மீது 5 தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதில் 3 தோட்டாக்கள் தலையில் பாய்ந்த தால் அவர் சம்பவ இடத்திலேயே மரணத்தை தழுவியுள்ளார்.
தற்போதைய உக்ரைன் அரசில் உள்ளவர்களின் ஊழல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் போட்னோவிடம் இருந்ததால் அவர் திட்டமிட்ட ரீதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போர்க் குற்றங்கள் தொடர்பிலான ரஸ்யாவின் நடைவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரி யான ரொடி யோன் மிரேஜிக் தெரிவித்துள்ளார்.
போட்னோவ் 2006 ஆம் ஆண்டு உக்ரைன் நாடாளுமன்றத்தில் இணைந்து பணியாற்றியதுடன், 2010 ஆம் ஆண்டு முன்னாள் அதிபரின் சட்டத்துறை உதவியாளராகவும் பணியாற்றியிருந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவப் புரட்சியை தொடர்ந்து அவர் ஸ்பெயினுக்கு தப்பிச் சென்றிருந்தார்.
இருந்தபோதும் அவர் தொலைக்காட்சி களுக்கு அடிக்கடி நேர்காணல்களையும் வழங்கி வந்திருந்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு உக்ரைனுக்கு திரும்பிய அவர் செலன்ஸ்கியின் ஆலோசகராக பணியாற்றியிருந்தார். ஆனால் 2022 ஆம் ஆண்டு ரஸ்ய – உக்ரைன் போர் ஆரம்பமாகியதும் அவர் ஸ்பெயினுக்கு தப்பி சென்றிருந்தார். ரஸ்ய ஆதரவு ஊடகங்களுடன் அவர் செயற்பட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியிருந்தது.
உக்ரைனுக்கு வெளியில் உக்ரைன் புல னாய்வு அமைப்பினர் பல படுகொலைகளை செய்து வந்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமம் ரஸ்யாவின் தலைநகருக்கு அண்மையில் வைத்து உக்ரைன் சட்டவாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.