ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து வவுனியா அந்தணர் ஒன்றியம் மற்றும் ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து நினைவு பிரர்hத்னைகள் இடம்பெற்றது.
வவுனியா குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரார்த்தனையில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உட்பட அரச திணைக்கள உத்தியோத்தர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதேவேளை விசேட ஆத்மசாந்தி பிரார்த்தினையும் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் ஆலய நிர்வாகத்தினரும் இணைந்து ஆத்ம சாந்தி மற்றும் அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது தமிழருவி த. சிவகுமாரனின் அஞ்சலி உரையும் இடம்பெற்றிருந்ததுடன் நெய் விளக்கேற்றி பிரார்த்தனையும் நடைபெற்றது.
அத்துடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் தலைமையில் மௌனப்பிரார்த்தினை மற்றும் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






