ஈரான் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

ஈரான் நாட்டில் புதன்கிழமை நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்த தகவலை உலக செய்திகளை வெளியிட்டு வரும் பிரபல செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

ஐஎஸ் அமைப்பு சம்பந்தப்பட்ட டெலிகிராம் சேனலில் இது குறித்து அறிக்கை வெளியாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம், ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்தது.

அவரது நான்காம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான மக்கள் அவரது நினைவிடத்தை நோக்கி ஊர்வலம் சென்றனர். அப்போது அந்தப் பகுதியில் இரண்டு முறை குண்டுகள் வெடித்தது.

இந்த சம்பவத்தால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 170 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.