இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 1ம் திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த 26-ம் திகதி இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானின் இராணுவ தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த சூழலில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், “ஈரான் மற்றும் எதிர்ப்பு படைகள் (ஹமாஸ், ஹிஸ்புல்லா) மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.



