ஈரானிய ஹண்டாலா ஹேக்கர் கள் இஸ்ரேலிய ஆதரவு பெற்ற ஈரான் இன்டர்நேஷனல் பிரச்சார மையத்தை வெற்றிகரமாக ஹேக் செய்துள்ளனர். ஈரான் இன்டர்நேஷனலின் முக்கிய செய்தி பெறும் கணக்கு கையகப்
படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. தகவல் தருபவர்கள், உளவாளிகள், துரோகிகள் மற்றும் வெளிநாட்டு முகவர்களுடன் தொடர்பு கொள்வதற்காக “பாதுகாப்பான வழி” என்று அழைக் கப்படும் இந்த சேனல், இப்போது ஹண்டாலாவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த சேனலுடன் பகிரப்ப டும், உள்வரும் அனைத்து செய்திகள், இணைப்புகள், அறிக்கைகள், படங்கள் மற்றும் வீடியோக்கள் முழுமையாகப் பிரித்தெடுக்கப்பட் டுள்ளன. உள்ளடக்கம் செயலாக்கப்பட்டு பல உளவுத்துறை மற்றும் அடையாள தரவுத்தளங்கள் இனங்காணப்பட்டு அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள் ளன.
இந்த நெட்வொர்க்கைத் தொடர்பு கொண்ட 71,000 க்கும் மேற்பட்ட நபர்களின் முழு அடை யாள சுயவிவரங்கள் தன்னிடம் இருப்பதாக ஹண்டாலா நிறுவனம் கூறுகின்றது. பெயர்கள் மற்றும் தரவு இப்போது வகைப்படுத்தப்பட்டு, அட்டவணைப்படுத்தப்பட்டு, காப்பகப்படுத் தப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் விரைவில் வெளியிடப்படும் என அது அறிவித்துள்ளது.
ஊடகம் என்ற போர்வையில் மொசாட் இயக்கிய உளவு மற்றும் செல்வாக்கு நெட்வொர்க்கின் இருப்பை கையகப்படுத்தப் பட்ட ஆவணங்களின் பகுப்பாய்வு உறுதிப் படுத்துகிறது, இது “சுயாதீன பத்திரிகை” என்ற தவறான கொடியின் கீழ் செயற்பட்டுள்ளது என்று ஹண்டாலா தெரிவித்துள்ளது.