இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி  தமிழகத்தில் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது.

கடந்த மாதம் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர், இலங்கை எல்லைக்குள்  வைத்து கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் கல்பிட்டி மீன்வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் 22 மீனவர்களும் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கில் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 2 விசைப் படகுகளையும், 22 மீனவர்களையும், அங்குள்ள நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்து மீட்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இன்று தருவைகுளத்தில் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.