இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பது குறித்த திட்டம் அரசிடம் இல்லை

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான நிலைப்பாடு அரசிடம் இல்லை என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற புத்தாண்டு  நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோது, மீனவர் பிரச்சினை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்படவுள்ளனர் என்று வெளியாகிய பொய்ச்செய்திகளை பொதுமக்கள் நம்பக்கூடாது.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற நாள் முதல் இதுவரை நாட்டைக் காட்டிக்கொடுக்கின்ற எந்தவொரு செயற்பாட்டையும் ஜனாதிபதி மேற்கொள்ளவில்லை. இதனால் ஜனாதிபதி மீது பொதுமக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும். அவரது ஆட்சி முறை பற்றி நம்பிக்கை வைக்க வேண்டும்”  என்றார்.