இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்தினால் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும்!

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக முன்னெடுத்து வருகின்ற மீன்பிடி நடவடிக்கைகளை முற்று முழுதாக நிராகரிக்கிற அல்லது நிறுத்துகின்ற செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டால் மாத்திரம் அதிகாரிகளுக்கு இடையில் இடம் பெறுகின்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் 1ம் திகதி அன்று வியாழன் மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.