இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருகிறது

இந்த ஆண்டு ஸ்டீவ் ஹாங்க் உலகளாவிய பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை 13வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த பணவீக்கக் குறியீட்டை ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹாங்க்ஸ் உருவாக்கியுள்ளார்.

கடந்த வருடத்தின் ஜூன் மாத சுட்டெண் உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் காட்டியது.

எவ்வாறாயினும், நாட்டின் பணவீக்கம் வீழ்ச்சியடைந்து ஏழு மாதங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட சமீபத்திய பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை 13வது இடத்தைப் பெற்றுள்ளது.