இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணங்கள் மேற்கொள்ளத் தடை – சிங்கப்பூர் அரசு அறிவிப்பு

இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்று காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.

நீண்ட கால வீசா அனுமதியுடையவர்கள் மற்றும் குறுகிய கால அனுமதியுடையவர்கள் உள்ளிட்ட இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் லோரன்ஸ் வொங்இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை இரவு 11.59 மணி முதல் இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து ட்ரான்ஸிஸ்ட் அடிப்படையிலும் சிங்கப்பூரிற்குள் பிரவேசிப்பதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் அதனை அண்டிய நாடுகளில் கொவிட் நிலைமை மிக மோசமாகக் காணப்படுகின்றது எனவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.