இலங்கைக்கு Furosemide ஊசி மருந்தினை வழங்கிய இந்தியா

இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட அவசர உதவிக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் முகமாக, இலங்கை வைத்தியசாலைகளில் நிலவும் தட்டுப்பாட்டினை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் 50,000  20mg/2ml Furosemide ஊசி மருந்து தொகுதி இந்திய அரசாங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா  இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் குறித்த மருந்து தொகுதியானது கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்கே, மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் தெதுனு டயஸ் மற்றும் இலங்கை அரசின் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.